search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை கடைகள்"

    நாளை ஆயுத பூஜையும், நாளை மறுநாள் விஜயதசமியும் கொண்டாடப்படுவதையொட்டி கோவை மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
    கோவை:

    ஆயுத பூஜை நாளையும், நாளை மறுநாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கடை, வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதனை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் வரத்து அதிகரித்து இருந்தது. வாழைக்கன்று, பொரி, கடலை ஆகியவற்றின் விற்பனை இன்று அதிகமாக இருந்தது.

    இதனை வாங்கி செல்ல மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆயுத பூஜையையொட்டி கோவையில் பூக்களின் விலை அதிகரித்து உள்ளது.கோவையில் இன்று ஒரு கிலோ அரளிப்பூ ரூ. 400-க்கு விற்பனையானது. செவந்தி பூ ரூ. 200 முதல் 240-க்கும், ரோஜா ரூ. 240-க்கும், சம்பங்கி ரூ. 300-க்கும், ஒரு தாமரை ரூ. 30-க்கும் விற்பனையானது. வாழை இலை ஒரு செட் ரூ. 40-க்கும், பூசணி ஒரு கிலோ ரூ. 30-க்கும், ஒரு தேங்காய் ரூ. 30-க்கும், வெற்றிலை ஒரு கவுலி ரூ. 60-க்கும் விற்பனையானது.

    பொரி ஒரு பக்கா ரூ. 20-க்கும், பொரி கடலை ஒரு கிலோ ரூ. 100-க்கும், நிலக்கடலை ரூ. 110-க்கும், அவல் ரூ. 40-க்கும் நெல் பொரி ஒரு லிட்டர் ரூ. 10-க்கும், ஆப்பிள் ஒரு கிலோ ரூ. 110-க்கும் சாத்துக்குடி ரூ. 45-க்கும், கொய்யா ரூ. 70-க்கும், ஆரஞ்சு ரூ.60-க்கும், மாதுளை ரூ. 110-க்கும், திராட்சை ரூ. 75-க்கும் விற்பனையானது.

    வாழைப்பழம் ஒரு டஜன் ரூ. 60-க்கும், கரும்பு ஒரு கட்டு ரூ. 750-க்கும் விற்பனையானது.

    ×